மக்கள் நீதித்துறை மேல் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கையின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று (17.07) வியாழக்கிழமை வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போது அதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்த பின் இன்று இலங்கையில் துரிதமாக கட்டடங்கள், வீதிகள் என அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாம்
நீதித்துறையை கட்டியெழுப்ப முடியாது. மக்கள் நீதித் துறை மேல் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதனை தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும். அதுவே நீதித்துறையின் அவிவிருத்தி ஆகும்.
இலங்கையின் உயர் நீதிமன்ற செயற்பாடுகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொடர்ந்து கொண்டுவரப்படுகின்றன.
இதன் மூலம் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தவும் அது தொடர்பான தகவல்களை இலகுவாக பேணவும் முடியும். எனவே, நாம் ஒன்றினைந்து நிதித்துறையை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக