அன்டனோவ் 32 ரக விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி, 32 பாதுகாப்பு படையினரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி திருமதி ஸ்வர்ணாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏவுகணை படைப் பிரிவை சேர்ந்த இரண்டு பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2000ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில் பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோவ் 32 ரக விமானம் வில்பத்து வனப்பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது, ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக