வியாழன், 31 ஜூலை, 2014

ஹட்டனில் பாவனைக்கு உதவாத 15000 கிலோ கோதுமை மா மீட்பு...!!!!(படங்கள் இணைப்பு)

ஹட்டன் நகரிலுள்ள உணவகங்கள் நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் நேற்று திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது சுமார் 15 உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. உணவகங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதுடன் காலாவதியான உணவு வகைகள், குளிர்பான போத்தல் வகைகள், பாண் வகைகள், மிளகாய் தூள் என பல சமையல் வகை பொருட்கள் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இதில் 15 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இனிமேல் இவ்வாறான காலவதியான உணவு பொருட்களை வைத்திருப்பதை தடுத்துக் கொள்ளுமாறு விலை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது.



இதேவேளை, ஹட்டன் டிக்கோயா நகர சபை எல்லைக்கு உட்பட்ட கடைகளில் பாவனைக்குதவாத 15000 கிலோ கிராம் எடையுடைய கோதுமை மா அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டிக்கோயா இன்ஜெஸ்ட் தோட்டத்தில் தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளிகளுக்கு காலவதியான கோதுமை மாவை வழங்கியதாக கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார பரிசோதகர் விசாரணைக்குட்படுத்தும் போது காலாவதியான கோதுமை மா வைத்திருந்து தெரியவந்தது.

அத்தோடு வழமைக்கு மாறாக கோதுமை மாவில் நிறுவன குறியீடு இல்லாமல் இருப்பதாக தோட்ட தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு நிறுவன குறியீடு மற்றும் காலவதியான என 15000 கிலோ கோதுமை மா சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டதுடன், கோதுமை மா வைத்திருந்த களஞ்சியசாலைக்கும் முற்றுகை இடப்பட்டது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர் பி.கே.வசந்த தெரிவித்தார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக