வெளிநாட்டு நிபுணர் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணை நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர் குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
பிரித்தானிய சட்டத்தரணியான டெஸ்மன் டி சில்வா தலைமையிலான இந்த நிபுணர் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
நிபுணர் குழுவின் மூன்று பிரதிநிதிகளும் முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டன் சட்டத்தரணிகளான டெஸ்மன் டி சில்வா மற்றும் ஜெப்ரி நைஸ் ஆகியோரை பிரிட்டன் சட்டத்தரணிகள் சங்கத்திலிருந்து வெளியேற்றுமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக