வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதப் படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று யாழ். நகரில் கண்டனப் போராட்டமொன்று நடை பெறவுள்ளது.
வடக்கு- தெற்கு ஊடக கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த 25ம் திகதி ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ்.ஊடகவியலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்த படையினர் முயற்றி செய்தமை உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வடக்கு தெற்கு ஊடக கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் குறித்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மேற்படி போராட்டத்திற்கான ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஏற்பாட்டாளர்கள், குறித்த போராட்டத்தில் வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக