புதன், 2 ஜூலை, 2014

பூமியை கண்காணிக்கும் சொந்த செய்மதியை இலங்கை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது....!!!!

இலங்கை தமது சொந்த தயாரிப்பிலான சிறிய ரக பூமியை கண்காணிக்கும் செய்மதி ஒன்றை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதும் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்படும் இந்த திட்டத்தின் யோசனை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிதியொதுக்கீட்டை மேற்கொண்டதும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக