பேஸ்புக் சமூக இணை யதளம் சுமார் 700,000 பயனர்களிடம் அவர்க ளுக்கு அறிவிக்காமல் உளவியல் சோதனை ஒன்றை மேற்கொண்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதில் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்தி பயனர்களின் உணர்வை அவதானிக்கும் சோதனையையே பேஸ்புக் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் இரண்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஆய்வு மூலம், பயனர்களின் கருத்து வெளியிடுவதில் ஏற்பட்ட உணர்வுபுர்வமான மாற்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பயனர்களின் தரவுகளில் இருந்து தேவையற்ற வகையில் தகவல்களை சேகரிக்கவில்லை என்று பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. "குறிப்பிட்ட நபரின் பேஸ்புக் கணக்கில் இருந்து எந்த தரவும் பயன்படுத்தப்படவில்லை" என்று சமூக வலையமைப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் சென்பிரான்ஸிஸ்கோவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கோர்னல் பல்கலைக்கழகங்களே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
எனினும் இந்த ஆய்வு குறித்து பல தரப்புகளும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு 689,000 பேஸ்புக் பயனர்களிடம் ஒருவார காலத்திற்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக