திங்கள், 9 ஜூன், 2014

நெடுந்தீவில் கடலில் மூழ்கியது இந்திய மீனவரின் ட்றோலர்!!


இன்று அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் 32 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தபோது மீனவர்களின் ட்றோலர் ஒன்று கடலில் மூழ்கியது. அந்த ட்றோலர் கடலில் மூழ்கும்போது அதில் இருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தமது படகில் ஏற்றிக் காப்பாற்றினர். இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 32 இந்திய மீனவர்களை இன்று அதிகாலை நெடுந்தீவில் கடற்படையினர் கைதுசெய்தனர்.

அத்துடன் அவர்கள் பயன்படுத்திய ட்றோலர்களையும் கைப்பற்றினர். இந்திய
மீனவர்களின் எட்டு ட்றோலர்களில் 236 என்ற இலக்கத்தையுடைய ட்றோலரே கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் ட்றோலருடன் கடற்படையினரின் டோராப் படகு மோதி விபத்துக்குள்ளானதிலேயே அது மூழ்கியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தி ஒன்று தெரிவித்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக