
போருக்குப்பின் போரினால் ஏற்பட்ட வடுக்கள் காரணமாக கலைகளை வெளிக்கொண்டு வருதலில்
இருக்கின்ற நெருக்குவாரங்கள் காரணமாக கவின்கலை அமைப்புக்கள் இயங்குவதில் பின்னடைவு நிலை காணப்பட்டுவந்தது.
எனினும் தற்போடு வடமாகாணசபை தேர்தலின் பின்பு மெல்ல மெல்ல கவின்கலை மேம்பாட்டில் அக்கறையுள்ள குழுக்களின் வெளிப்பாடுகள் அரங்கேறுவதை காணக்கூடியதாக உள்ளது.
இதன் ஒரு வெளிப்பாடாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி தனது மாணவர் மன்ற கலை வெளிப்பாடுகளை அரங்கேற்றியிருந்தது.
இதில் பிரதம விருந்தினராக முதுபெரும் மிருதங்க வித்வான் ஜயாத்துரை சிவபாதம் மற்றும் முதுபெரும் பாடகி பார்வதி சிவாபாதம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பல்வேறு பண்பாட்டு கலை நிகழ்வுகளை அரங்கில் மாணவர்கள் நிகழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது. இதே வேளை விழிப்புலனற்ற மிருதங்க வித்துவான் கிருஸ்ணபிள்ளை சிறிகரன் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக