புதன், 7 மே, 2014

வவுனியாவில் தொடரும் திருடர்களின் கைவரிசை!!! மக்கள் விழிப்புடன் செயல்படுங்கள்!!!

(வவுனியாவிலிருந்து பூர்வீகம் செய்தியாளர் நிகே )

வவுனியாவின் பல பகுதிகளில் தற்போது தொடர்கொள்ளைகள் நடைபெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா காத்தார் சின்னக்குளம், மகாறம்பைக்குளம், திருநாவற்குளம், பத்தினியார் மகிழங்குளம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து திருடர்கள் கைவரிசை காட்டியவண்ணம் உள்ளனர். இது தொடர்பாக வவுனியா பொலிஸ் தொடர்ந்தும் திருடர்களை தேடியவண்ணமும், சந்தேகத்தின் பெயரில் சிலரை கைது செய்து இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

காத்தார் சின்னக்குளம் பகுதியில் வீட்டின் வெளியே
சிறுநீர் கழிக்க சென்ற குடும்பஸ்தர் வீட்டின் கதவோரத்தில் மறைந்திருந்து தாக்கிய திருடர் கும்பலால் மயக்கமுற்ற நிலையில்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார், இவரின் கழுத்து பகுதியில் தாக்கிய திருடர்களால் ஏற்பட்ட வலியில் எழுப்பிய குரலில் குடும்பத்தினரின் சத்தத்துடன் திருடர்கள் வெள்ளை வானில் தப்பிசென்றதாக எமது வைத்தியசாலை பூர்வீகம் செய்தியாளர்  தெரிவித்தார்.

பொலிசார்  விழிப்புடன் செயல்பட்டால் திருடர்களை கைது செய்யமுடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியாவில் பல பகுதிகளில் திருடர்கள் உலாவுவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்ட்டப்படுகிறார்கள், அத்துடன் 119 மற்றும் தங்கள் பிராந்திய பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக