வெள்ளி, 9 மே, 2014

கணேசபுரம் பாடசாலையின் வகுப்பறை கட்டுமானத்திற்கு புளொட் பவன் உதவி..!!

வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்விகற்கும்; உயர்தர வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக் கட்டுமானப் பணிகளுக்காக சிறுதொகை நிதியுதவியினை திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கிவைத்த\ள்ளார்.
லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியினை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு க.சிவநேசன் (புளொட் பவன்) அவர்கள்
பாடசாலையின் அதிபரிடம் வழங்கிவைத்துள்ளார்.
மேற்படி வகுப்பறையின் கட்டுமானப் பணிகள் தற்போது இடம்பெற்றுவரும்; நிலையில் அதனைக் கட்டி முடிப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது...!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக