திங்கள், 12 மே, 2014

இலங்கையின் வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது........!!!!!!!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை இலக்கு வைத்து காணி அபகரிப்பு மற்றும் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்களுக்கு அந்த ஊடகம் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் 70க்கும் அதிகமானவர்கள் வடக்கு கிழக்கில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் குறைந்த பட்ச எண்ணிக்கையானவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் நிலை என்னவென்று தெரியவில்லை.

மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உண்மையான எண்ணிக்கையும் தெரியவில்லை.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் இராணுவத்தின் அச்சுறுத்தல்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக