திங்கள், 12 மே, 2014

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய பீடாதிபதியாக திரு கு. சிதம்பரநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். !!!

வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியின் மூன்றாவது பீடாதிபதியாக கௌரவ  கு. சிதம்பரநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற வவு­னியா கல்­வி­யியற் கல்­லூ­ரியின் 20 ஆண்டு நிறைவுவிழாவில் உரையாற்றிய போது.......
(வவு­னியா கல்­வி­யியற் கல்­லூ­ரியின் 20 ஆண்டு நிறைவுவிழா பீடா­தி­பதி க. பேணாட் தலை­மையில் இடம்­பெற்ற போதே  இவ்­வாறு தெரி­வித்தார்.)

எதிர்­பார்ப்­புக்கள் அதி­க­மாக இருந்தபோது நடந்­தது எதுவும் இல்லை. எதிர்­பார்ப்­புகள் குறை­வாக இருந்­த­போது நடந்­தது நிறை­யப்போல் இருக்கும் என வவு­னியா தேசிய கல்­வி­யியற் கல்­லூ­ரியின் உப–­பீ­டா­தி­பதி கு. சிதம்­ப­ர­நாதன் தெரி­வித்தார்.

வவு­னியா கல்­வி­யியற் கல்­லூ­ரியின் 20 ஆண்டு நிறைவுவிழா பீடா­தி­பதி க. பேணாட் தலை­மையில் இடம்­பெற்ற போதே  இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரி­வித்த அவர்,

மாண­வர்கள் நிறை­யவே முயற்சி எடுத்­துக்­கொள்ள வேண்டும். எப்­போது நேரம் கிடைக்­கின்­றதோ அப்­பொ­ழு­தெல்லாம் மாண­வர்கள் கற்க ஆயத்­த­மாக இருக்­க­வேண்டும். எந்­த­ள­விற்கு நீங்கள் முயற்சி எடுக்­கின்­றீர்­களோ அந்த அள­விற்கு நன்மை உங்­களை தேடிவரும். துர­திஷ்­ட­வ­ச­மாக பல மாண­வர்கள் முயற்சி எடுத்­துக்­கொள்­வ­தில்லை. முயற்­சியை தொடர்ச்­சி­யாக எடுக்கும் போது உங்­க­ளுக்கு முதிர்ச்சி வரும். அந்த முதிர்ச்சி எங்­க­ளுக்கு நல்ல விளை­வு­களை தரும். முதிர்ச்சி இல்­லா­ததால் வரும் விளை­வுகள் உங்­க­ளுக்கு உப­யோ­க­மா­ன­தாக இருக்­காது. உரு­வத்தால் உயர்ந்த மரங்கள் எல்லாம் பரு­வத்தால் அன்றி பயன்­த­ராது.

எனவே, நீங்கள் முதிர்ச்­சியின் அனு­ப­வத்தை அதி­க­ரித்­துக்­கொள்ள வேண்டும். கற்கும் உள்­ளத்­திற்குத் தயா­ராக வேண்டும். அப்­போது தான் நீங்கள் மேன்­மை­ய­டைய முடியும்.

எங்­க­ளு­டைய கல்­லூரி புகழின் உச்­சிக்குப் போயி­ருக்­கின்­றது. இகழ்ச்­சியின் ஆழத்­திற்கும் போயி­ருக்­கின்­றது. ஆனால் அதனை ஏற்­றுக்­கொள்­கின்­ற­னரோ தெரி­ய­வில்லை. பல ஆக்­கங்­க­ளையும் நன்­மை­க­ளையும் கண்­டி­ருக்­கின்­றது. இல்லை, அழி­வு­க­ளையும் தொட்­டுப்­பார்த்­தி­ருக்­கின்­றது.

ஏற்­றத்­தினை நாம் கண்­டி­ருக்­கின்றோம்; இறக்­கத்­தி­னையும் கண்­டு­கொண்­டி­ருக்­கின்றோம். உயர்வை நாம் பெற்­றி­ருக்­கின்றோம். தாழ்­வையும் நாம் பெற்­றி­ருக்­கின்றோம். நிறைய மகிழ்ச்­சியை பெற்­றி­ருக்­கின்றோம். துன்­பத்­தையும் நாம் அடைந்­தி­ருக்­கின்றோம். நாம் மேன்­மை­யையும் வான­ளாவப் பெற்­றி­ருக்­கின்றோம். ஆனால், இழி­வான நிலை­யையும் பெற்­றி­ருக்­கின்றோம். இவை எல்­லா­வற்­றுக்கும் நானும் கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்றேன். அர்ப்­ப­ணிப்­பு­டனும் கூட்­டு­ணர்­வு­டனும் பொறு­மை­யு­டனும் எப்­பொ­ழு­தெல்லாம் நாம் சேவை­யாற்­றி­னோமோ அப்­பொ­ழு­தெல்லாம் நாம் ஆக்­கத்­தையும் புக­ழையும் வெற்­றி­யையும் பெற்­றுள்ளோம்.

எப்­பொ­ழு­தெல்லாம் சந்­தர்ப்­பத்­துக்கு ஒவ்­வாத வகையில் பொய் கூறி­னோமோ, அதிக எதிர்ப்­பார்ப்­பு­க­ளுக்கு உட்­பட்­டோமோ, அதிக ஆசைக்கு அடி­மைப்­பட்­டோமோ அப்­பொ­ழு­தெல்லாம் அழி­வையும் துன்­பத்­தையும் இழி­வையும் பெற்றுக்கொண்டோம்.

ஆசி­ரி­யர்­க­ளா­கிய எங்­க­ளுக்கு சமூகப் பார்­வையும் நேர்த்­தி­யான பார்­வையும் இருத்தல் வேண்டும். எங்களுடைய பங்குபற்றலை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இது கல்வி சார்ந்த ஊழியர்களுக்கு மட்டுமல்ல, கல்வி சாரா ஊழியர்களுக்கும் பொருந்தும். இக் கல்லூரி உயிர்ப்புடன் இயங்குவதாலேயே நாம் உழைத்து ஊதியம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதனை அனைவரும் உணரவேண்டும் என தெரிவித்தார்.

இவரின் பதிவுகள் சில ......


மூன்று முறிப்பு பனங்காமத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்ப கல்வியை யோகபுரம் மகாவித்தியாலயத்திலும் இடை நிலை கல்வியை ஓமந்தை மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டதாரியான இவர் 1982 இல் முல்லை புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியரானார்.

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தை பெற்ற இவர் 23.9.1993 அன்று வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியின் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

1999 இல் தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முதுமாணி பட்டம் பெற்ற இவர் 2001 ஆம் ஆண்டு மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான கல்வியில் கல்வி முதுமாணி பட்டம் பெற்றார்.

2002 இல் வவனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரை இணைப்பாளராக பதவியுயர்வு பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டு கல்வியும் தர மேம்பாடும் உப பீடாதிபதியானார்.

2008 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பட்டம் பெற்ற இவர் கொழும்பு மனித உரிமைகள் நிலையத்தில் மனித உரிமைகள் டிப்ளோமாவையும் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக