வியாழன், 8 மே, 2014

வவுனியாவில் வர்த்தகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா நகர்பகுதியில் வணிகர் ஒருவர் தனது வணிகநிலையத்தில் வைத்து கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை இச்சம்பம் இடம்பெற்றுள்ளது
வவுனியா கூமாங்குளம் பகுதியினை சோ்ந்த 60 வயதுடைய கணேஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது வணிக நிலையத்தில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை இவரது உடலம் வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக