வியாழன், 8 மே, 2014

கண்டி பேராதனையில் யானைகள் கடத்தப்படுகிறதா!!!

பேராதனை பொலிஸ் பிரிவில் கன்னொருவ பகுதி வீட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட யானைக் குட்டி ஒன்று பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வன ஜீவராசிகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

மூன்றரை வயதுடைய யானைக் குட்டியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

யானை வைத்திருக்க குறித்த வீட்டாரிடம் அனுமதிப் பத்திரம் இருக்கின்ற போதிலும் 8-9 வயது யானைகளையே அவர்களால் வைத்திருக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யானை குட்டி ஹொரண பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

அண்மையில் உடவலவ தேசிய பூங்காவில் யானைகள் திருட்டுச் சம்பவம் ஒன்று அம்பலமானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக