சனி, 10 மே, 2014

அரசியல்வாதிகளுடைய பிள்ளைகளின் நடத்தைகளை மக்கள் வெறுக்கின்றனர்: ஹிருணிக்கா பிரேமச்சந்திர…!!

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளின் நடத்தைகள் குறித்து மக்கள் அருவருப்புடனே பேசி வருவதாக, ஆளும் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நல்லபடியாக இருக்கும் பிள்ளைகளும் இந்த நிலைமையை எதிர்நோக்க வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


50 மற்றும் 60 வயது மனிதர்களின் மனதையோ அவர்களின் எண்ணங்களையோ மாற்ற முடியாது. ஆனால் 20 வயதான நபர்களின் மனதையும் எண்ணத்தையும் எம்மால் மாற்ற முடியும்.

நான் மோதியது இலகுவான மனிதர்களுடன் அல்ல, எனது தந்தையின் மரணத்திற்கு பின்னர், எனக்கு ஆத்ம சக்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது.

கணவர்கள் இறந்த பின்னர், பெண்களுக்கு ஆத்ம சக்தியும் தன்னம்பிக்கையும் ஏற்படும். பெண்களுக்கு ஆத்ம சக்தியை போன்று பொறுமையும் உள்ளது.

கடந்த காலங்களில் சிலர் என்னை அவதூறுக்கு உட்படுத்தினர். பொறுமை, ஆத்ம சக்தியினால் என்னால் இந்த இடத்திற்கு உயர முடிந்தது எனவும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக