வியாழன், 8 மே, 2014

புலிகள் மீண்டு எழுவதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்த ஐந்து பேருக்கு கௌரவிப்பு...!!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டு எழுவதை தடுப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்ட ஐந்து காவற்துறை அதிகாரிகளை இலங்கை காவற்துறை திணைக்களம் கௌரவிக்கவுள்ளது. காவற்துறை திணைக்களம் இந்த தகவலை வெளிளியட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இரண்டு பேரை குறித்த
ஐந்து காவற்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே அப்பன், தேவியன் மற்றும் கோபி ஆகியோர் குறித்த விபரங்கள் அறியப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இதற்கு ஆரம்ப பணிகளை மேற்கொண்டிருந்த பளை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நான்கு கான்ஸ்டபிள்களையும் கௌரவித்து பரிசில்களை வழங்க காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் தீர்மானித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக