செவ்வாய், 6 மே, 2014

கிளிநொச்சி நகரத்தில் உள்ள சில காணிகளை பெரும்பான்மையினர் கையகப்படுத்தி உள்ளனர்..!!!!

கிளிநொச்சி நகரத்தில் உள்ள சில காணிகளை தெற்கிலிருந்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் கையகப்படுத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான காணி என்று கூறியே குறித்த காணிகளை
கையகப்படுத்தியிருப்பதாக காணிக்குச் சொந்தமானவர்கள் குறிப்பிடுகின்றனர்.


கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாமிட்டிருந்த மற்றும் அவர்களின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்த சில காணிகளே இவ்வாறு கையகப்படுதப்பட்டுள்ளன. முன்னதாக இந்தக் காணிகளில் இராணுவத்தினர்
முகாமிட்டிருந்தனர். பின்னர் குறித்த காணிகளை பெரும்பான்மையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

இந்தக் காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை. இதன் உரிமையாளர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் குறித்த காணிகள் புலிகளுக்குச் சொந்தமானவை என்றும் அவைகளை புலிகள் பணம் கொடுத்து வாங்கியதாகவும் கூறி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க மறுக்கப்பட்டு வருகிறது.

குறித்த காணிகளில் பெரும்பான்மையினர் வர்த்தக கட்டிடங்களையும் வீடுகளையும் அமைத்து வருகின்றனர். உரிமையாளர்கள் தொடர்ந்தும் காணிகளை மீளத் தருமாறு கோரி வருகின்றனர். இதேவேi இதுவரையில் உரிமை கோரப்ப்படாத சில காணிகளையும் இவ்வாறு பெரும்பான்மையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி நகரத்தை அண்டிய சில பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.

பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் பின் பகுதி, தமிழீழ நீதிமன்றம் அமைந்திருந்த இடத்தின் பின் பகுதி முதலியவையே இவ்வாறு அனுமதிக்கப்படாதுள்ளன. குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது காணிகளை இராணுவத்தினர் மீளத் தந்து மீள்குடியேற அனுமதிக்குமாறும் கோருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக