ஞாயிறு, 11 மே, 2014

பொகவந்தலாவையில் மரை வேட்டையில் ஈடுபட்ட மூவர் கைது….!!

பொகவந்தலாவை கிவ்தோட்டத்தில் மரை வேட்டையில் ஈடுபட்ட மூவரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று (11) பிற்பகல் 12 மணியளவில் கைது செய்தனர்.

காட்டுபகுதியில் இருந்து கிவ் தோட்ட பகுதிக்கு உணவு தேடி வந்த மரையை மூவர் கொண்ட குழுவினர் வேட்டையாடிய நிலையில் தேயிலை மரத்தின் கால்வாய் ஒன்றில் போடப்பட்டு கிடந்தது.
குறித்த மரையை இனங்கண்ட தோட்டமக்கள் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் சம்பவம் இடத்திற்குச் சென்ற பொலிஸார் கால்வாயில் கிடந்த மறையை மீட்டெடுத்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.


இதன்படி பொலிஸார் சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்தனர்.
மீட்டெடுக்கபட்ட மரை சுமார் 300 கிலோ நிறை கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் மூன்று பேரும் நாலை ஹட்டன் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக