ஞாயிறு, 11 மே, 2014

(சற்று முன்னர்) வவுனியா- மன்னார் வீதியும், கண்டி வீதியும்(A9) இணையும் சந்தியில் விபத்து !!!

மன்னார் வீதியின் ஊடாக கண்டி வீதி நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி A9 (கண்டி வீதி) பிரதான வீதியை அடைவதற்காக காத்திருந்த வேளையில் பின்னால் கட்டுபாட்டை இழந்து வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த பயணி ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.


பட்டா ரக வாகனத்தை செலுத்தியவர் போதையில் இருந்ததாகவும், வாகனத்தில் மதுபான போத்தல் இருந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.
எனினும் மக்கள்  கூட்டம் அலைமோதிய  போதிலும் சாரதி வாகனத்தை விட்டு இறங்காமல் பொலிசார் பாதுகாப்பு கொடுத்ததாகவும் பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர். மேலும் இருவர் சிறு காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூர்வீகம் செய்திகளுக்காக வன்னியிலிருந்து  நிகே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக