கிளிநொச்சிக்கும் முழங்காவிலுக்குமான பிரதான போக்குவரத்துப் பதையில் முறிப்பு சந்தியை அண்டிய பகுதியில் இராணுவத்தினர் கடுமையான சோதனைக் கெடுபிடிகளில் ஈடுபடுகின்றனர். இங்குள்ள சோதனைச்சாவடி ஓமந்தை சோதனைச்சாவடி போல செயற்படுவதாக அந்த வீதியால் பயணம் செய்யும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களின் முன்பு நாட்டில் உள்ள சகல சோதனைச் சாவடிகளையும் மூடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இதன்படி வடக்கில் உள்ள ஓமந்தை சோதனைச்சாவடியும் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களின் முன்னர் மீண்டும் புலிகள் மீளிணைவதாக கூறிய அரசாங்கம் ஓமந்தை சோதளனசாவடியில் சோதனை நடவடிக்கைகளை மீளத் தொடங்கியது.
அது மாத்திரமின்றி நாட்டில் பல்வேறு இடங்களிலும் சோதனைக் கெடுபிடிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் முறிப்பில் புதிதாக ஒரு சோதனைச் சாவடியை இலங்கை அரச படைகள் ஆரம்பித்துள்ளனர். இன்னொரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் செல்வதைப்போல அங்கு கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
அந்த வீதியால் செல்லும் பாடசாலை மாணவிகளை கண்டதும் இராணுவத்தினர் கீழ் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பில் அண்மையில் செய்திகள் வெளியிட்டிருந்தது. குறித்த பகுதியிலேயே பயங்கரவாத்தை தடுப்பதாகக் கூறும் சோதனை நிலையம் அமைந்துள்ளது.
இந்த வீதியால் செல்லும் கனகரக வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அத்துடன் மக்கள் பயணிக்கும் பேரூந்துகளும் இராணுவத்தின் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
கோபி முதலிய புலி உறுப்பினர்கள் தம்மால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக இலங்கை அரச படைகள் அறிவித்தபோதும் குறித்த சோதனை நிலையம் மூடப்படாமல் தொடர்ந்தும் சோதனைக் கெடுபிடிகள் நிகழ்த்தப்பட்டு மக்களுக்கு அசளகரியங்கள் ஏற்படுத்தப்படுவதாகதெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக