வவுனியா சேமமடு ஆதி விநாயகர் ஆலய கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதனால் இன்றையதினம்(04/04) ஆலயத்தில் பாலஸ்தான நிகழ்வு நடைபெற்றது.
சரணிய புரிஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் பாலஸ்தான பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்னும் சில தினங்களில் கட்டிட வேலைகள் நடைபெற இருப்பதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். அத்தோடு ஆலய கட்டிட பணிகளுக்கு உதவி புரிய விரும்பியவர்கள் ஆலய பரிபாலன சபையினருடன் தொடர்புகொள்ளுமாறு பூர்வீகம் இணையத்தளம் அறியத்தருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக