ஞாயிறு, 11 மே, 2014

சமூகசேவையாளர் அமரர் பொன்னையா முத்தையா அவர்களின் சிலை திறப்பு விழாவும் நினைவுப் பேருரையும்!!(படங்கள் இணைப்பு)

வவுனியா கள்ளிக்குளத்தைச் சேர்ந்த சிறந்த கூட்டுறவாளரும், சமூக சேவையாளருமான  அமரர் பொன்னையா முத்தையா அவர்களின் சிலை திறப்பு விழாவும் நினைவுப் பேருரையும் இன்றையதினம்(11/05) முத்தையா கூட்டுறவு கலாச்சார  மண்டபத்தில் நடைபெற்றது.  

சிலைக்குரிய பூசையினை குடியிருப்பு விநாயகர் ஆலய பிரதமகுரு திரு க.கந்தசாமிகுருக்கள் நிகழ்த்தியதை தொடர்ந்து கூட்டுறவுக்கொடியினை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கௌரவ திரு.கு.இரவீந்திரநாதன் அவர்கள் ஏற்றினார். 



அதனைத்தொடர்ந்து அமரர் பொன்னையா முத்தையா அவர்களின் சிலையினை வவுனியா மாவட்ட முன்னாள் அராசாங்க அதிபர் கௌரவ திரு கே.சி.லோகேஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து விருந்தினர்கள் அமரர் பொன்னையா முத்தையா அவர்களின் சிலைக்கு  மாலை அணிவித்து கௌரவித்தார்கள். 

இவ் நிகழ்வில் ஆசியுரையினை குடியிருப்பு விநாயகர் ஆலய பிரதமகுரு திரு க.கந்தசாமிகுருக்கள் அவர்களும், வரவேற்புரையினை முன்னாள் பிரதேச செயலாளர் திரு க.ஐயம்பிள்ளை அவர்களும், நிகழ்வின் தலைமை உரையினை சிலை அமைப்புக்குழுவின் தலைவர் திரு நா.சேனாதிராசா அவர்களும், நினைவுப்பேருரையினை கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களும் நிகழ்த்தினார்.

இவ் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்களும், வவுனியா பிரதேச செயலாளர் திரு கே.உதயராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் திரு க.சிவலிங்கம், சட்டத்தரணி திரு க.தயாபரன், வட மாகாண சபை உறுப்பினர் திரு ம.தியாகராசா, மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் திரு இ.சுப்பிரமணியம், ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் திரு சி.சுப்பிரமணியம், வவுனியா நகரசபையின் செயலாளர் திரு க.சத்தியசீலன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),  அமரர் பொன்னையா முத்தையா அவர்களின் பாரியார், மகனான தோழர் மு. கண்ணதாசன் ( தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) உறுப்பினர், சமூக சேவையாளர்) அமரர் பொன்னையா முத்தையா அவர்களின்  பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் , உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். 



பூர்வீகம் செய்திகளுக்காக வன்னியிலிருந்து ஓவியன் 


















1 கருத்து: