புதன், 7 மே, 2014

குடிவரவு குடியகல்வு பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....!!!!!

இலங்கையின் குடிவரவு குடியகல்வு பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் இந்த விசேட
தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1962 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் துணைக் கட்டுப்பாட்டாளர் ஜயவீர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

வார  நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் இவ்வாறு தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் மேலும்  தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக