சனி, 10 மே, 2014

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்....!!!!!

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது கொழும்பில் இருந்து பளை வரையிலான புகையிரத சேவைகளே இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் பளையிலிருந்து சாவகச்சேரி வரையான பரீட்சார்த்த ரயில் சேவை
இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரதப்பாதை நிர்மாணப்பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதமளவில் யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக