இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மே 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக தமிழக, ஆந்திர கடலோர மீனவ பிரதிநிதிகள் இன்று(11) இலங்கைக்கு
வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை முன்னிட்டு தமிழக மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று(10) நடைபெற்றதுடன் இலங்கை இந்திய மீனவரகளுக்கிடையிலான முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27 ஆம் திகதி சென்னையில் நடைபெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை மார்ச் 13 ஆம் திகதி கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் மார்ச் 27 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதுடன் தவிர்க்க முடியாத காரணங்களால அன்றைய தினமும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்நிலையில் மே 12, 13ஆம் திகதிகளில் இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என இலங்கை அரசுக்கு இந்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியுள்ளதுடன் இந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக