நாட்டில் 2066 கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டபிள்யூ.ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம். பி. தயாசிறி ஜயசேகரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்: நாடெங்கிலும் 2066 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும். பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக இப்போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படும். கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியையும், கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியையும் பெற்றிருப்பவர்கள் இப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் தகுதி பெற்றவர்களாவர்.
வியாழன், 7 அக்டோபர், 2010
நாட்டில் 2066 கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள்..!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக