புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் இலங்கை ஹாஜிகளின் முதலாவது குழு எதிர்வரும் 17 ஆம் திகதிசவுதி அரேபியா நோக்கி பயணமாகவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர்எம்.எச்.எம்.நவவி தமிழ் மிரர் இணையத்துக்கு தெரிவித்தார். இம்முறை இலங்கைக்கு சவுதி அரசாங்கம் 5800 பேர் கடமையினை செய்வதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.அதனடிப்படையில் இலங்கையில் 96 பதிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் முகவர் நிலையங்களுக்கு இவைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இம்மாதம் 17 ஆம் திகதி 300 ஹாஜிகள் இலங்கையிலிருந்து செல்லவுள்ளதாக கூறிய அவர் தமது திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் வைத்திய குழுவொன்றும் சவுதிக்கு செல்லவுள்ளதாகவும் கூறினார். ஹாஜிகளை வழியனுப்பிவைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாகலந்து கொள்ளவுள்ளதாக பணிப்பாளர் நவ்வி தெரிவித்தார்.
வெள்ளி, 8 அக்டோபர், 2010
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் இலங்கை ஹாஜிகளின் முதலாவது குழு எதிர்வரும் 17 ஆம் திகதி சவுதி அரேபியா நோக்கி பயணம்..!
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் இலங்கை ஹாஜிகளின் முதலாவது குழு எதிர்வரும் 17 ஆம் திகதிசவுதி அரேபியா நோக்கி பயணமாகவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர்எம்.எச்.எம்.நவவி தமிழ் மிரர் இணையத்துக்கு தெரிவித்தார். இம்முறை இலங்கைக்கு சவுதி அரசாங்கம் 5800 பேர் கடமையினை செய்வதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.அதனடிப்படையில் இலங்கையில் 96 பதிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் முகவர் நிலையங்களுக்கு இவைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இம்மாதம் 17 ஆம் திகதி 300 ஹாஜிகள் இலங்கையிலிருந்து செல்லவுள்ளதாக கூறிய அவர் தமது திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் வைத்திய குழுவொன்றும் சவுதிக்கு செல்லவுள்ளதாகவும் கூறினார். ஹாஜிகளை வழியனுப்பிவைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாகலந்து கொள்ளவுள்ளதாக பணிப்பாளர் நவ்வி தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக