செவ்வாய், 4 மே, 2010

நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்..!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இவர்கள் நாளையதினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல, எஸ்.பி.திசாநாயக்க மற்றும் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இதன்படி வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சுப் பொறுப்பை கெஹலிய ரம்புக்வெலவிற்கும், உயர்கல்வி அமைச்சுப் பொறுப்பை எஸ்.பி திசாநாயக்கவுக்கும், விஞ்ஞான தொழில்நுட்பவியல் அமைச்சுப் பொறுப்பை கலாநிதி சரத் அமுனுகமவுக்கும், கால்நடை அபிவிருத்தியமைச்சுப் பொறுப்பை ஆறுமுகம் தொண்டமானுக்கும் வழங்கவுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோருக்கு பிரதியமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக