செவ்வாய், 4 மே, 2010

கிழக்கில் தனியார் போக்குவரத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை..!

கிழக்கு மாகாணத்தில் தனியார் போக்குவரத்துச் சேவையினை விஸ்தரிக்க இம்மாகாண அமைச்சின் தனியார் போக்குவரத்து அதிகார சபை புதிய திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கமைய இப்புதிய திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக மாகாண போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.யுவநாதன் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ் போக்குவரத்தினை விஸ்தரிப்பது பற்றி விசேட கூட்டமொன்று இன்று மட்டக்களப்பு ஆரையம்பதி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மாகாணத்தின் தனியார் போக்குவரத்தில் சுமார் 600 தனியார் வாகனங்கள் தினமும் சேவையில் ஈடுபடுகின்றன. இவைகளுக்கான பாதை, போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுத்தல், தனியார்துறை போக்குவரத்து ஊழியர்களுக்கான சீருடை விநியோகம், அடையாள அட்டை விநியோகம், மானிய அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வசதிகள் உட்பட பல அடிப்படை வசதிகளை கிழக்கு மாகாண சபை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். இம்மாநாட்டில் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக