
சட்டமா அதிபர் தெரிவிக்கிறார்சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் மெஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்த இறுதி ஆவணங்கள் இந்த வாரத்தில் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்தினால் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டால் பொதுமன்னிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேன்முறையீடு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டாலும் திஸ்ஸநாயகம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் பொதுமன்னிப்பையும் வாபஸ் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையும் ஒரேநேரத்தில் நிறைவேற்றினால் இந்தநிலைமை ஏற்படாது எனவும் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக