வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வசம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள் உள்ளன..!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வசம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள் உள்ளன.பாதுகாப்பு, நிதித் திட்டமிடல், துறைமுக விமானசேவைகள், பெருந்தெருக்கள் ஆகிய நான்கு துறைகளுக்குமான அமைச்சுப் பொறுப்புகளே இவையாகும்.இதேவேளை தமிழர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பும் இருவருக்கு பிரதியமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளதுடன் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி முரளிதரன் மீள் குடியேற்ற பிரதியமைச்சராகவும் முத்து சிவலிங்கம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக