செவ்வாய், 27 ஏப்ரல், 2010

அசின் வீட்டுக்கு டோனி திடீர் விசிட் இன்னொரு காதல் கதை?

டோனி- தீபிகா படுகோனே, யுவராஜ் சிங்&கிம் சர்மா, யுவராஜ்&தீபிகா வரிசையில் இப்போது டோனி-அசின் என புது காதல் கதை பாலிவுட்டில் வலம் வருகிறது. கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளுக்கான தொடர்பு பல காலமாக தொடரும் ஒன்று. இதில் மன்சூர் அலிகான் பட்டோடி& ஷர்மிளா தாகூர், அசாருதீன்& சங்கீதா பிஜ்லானி என சில காதல்கள் மட்டுமே ஜெயித்திருக்கின்றன. இப்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கும் அசினுக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது. இது காதலாக இருக்கலாம் என பேச்சு எழுந்துள்ளது.இருவரும் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடித்தனர். அப்போது இவர்கள் நண்பர்களாயினர். டோனியின் பிறந்த நாள் விழாவில் அசின் கலந்துகொண்டார். இப்போது இன்னொரு சம்பவம் இவர்கள் நெருங்கி வந¢திருப்பதற்கு உதாராணமாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் இறுதி போட்டிகளுக்காக மும்பையில் இருந்தார் டோனி. மும்பை&பெங்களூர் அணிகள் மோதிய அரையிறுதி கிரிக்கெட் போட்டியன்று, மும்பை லோகன்ட்வாலாவிலுள்ள அசினின் வீட்டுக்கு சென்றிருக்கார் டோனி. அவர் வந்திருப்பதை அறிந்து, அந்த ஏரியாவில் கூட்டம் கூடிவிட்டது. பாதுகாப்பாளர்கள் கூட்டத்தாரை விரட்டியுள்ளனர். அரை இறுதி போட்டியை அசின் வீட்டிலேயே அவர் டிவியில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக