முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக மாவட்ட அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். விஸ்வமடு உடையார்கட்டு பிரதேசத்தினூடாக புதுக்குடியிருப்புக்கான மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடையார்கட்டு பிரதேசம் நிலக்கண்ணிவெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு மீள் குடியேற்றத்துக்கு தயார்படுத்தப்பட்ட நிலையிலுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசஅதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது. இன்னும் இரண்டு மூன்று வாரங்களுள் புதுக்குடியிருப்புக்கான மீள்குடியேற்றப் பணிகளை ஆரம்பிக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணிவெடிகள் அகற்றப்படும் ஒழுங்கிற்கேற்ப மீள்குடியேற்றத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் நகரபிரதேச சபைக்குள் மாத்திரம் இதுவரையில் 1500 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம்பேர் மீளக் குடியேறியுள்ளனர். இதேவேளை முள்ளியவளை, கள்ளப்பாடு, வண்ணான்குளம் ஆகிய பகுதிகளிலும் தற்போது மீள்குடியேற்றம் இடம்பெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திங்கள், 26 ஏப்ரல், 2010
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்றம் ஆரம்பம்..!!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக