செவ்வாய், 27 ஏப்ரல், 2010

புகைப்பிடித்தலைத் தூண்டும் பரம்பரை அலகுகள் : அமெ. ஆய்வுகள் தகவல்..!

புகைப் பழக்கத்திற்கு அடிமையாதல் என்பது சிலருக்குப் பரம்பரை பரம்பரையாக ஏற்படுவது. மூன்று பரம்பரை அலகுகள் ஒன்றிணைவதன் காரணமாக புகைத்தல் பழக்கம் ஏற்படுகிறது. புகைத்தலுக்கு அடிமையாதல் மற்றும் புகைப்பிடித்தலிலிருந்து விடுபடுதல் போன்றவை பரம்பரை அலகைப் பொருத்தது என வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர் ஹெலினா பேபேக் ஆகியோரின் ஆய்வுகளில் தெளிவாகியுள்ளது. சிகரெட்டுக்களில் காணப்படும் நிக்கட்டின், நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்த அதிக வாய்ப்பளிக்கின்றது. அமெரிக்காவில் 74,053 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இது நிரூபணமாகியுள்ளது. பரம்பரை அலகுகளைப் பயன்படுத்தி, இவ்வாறு பல்லாயிரக்கணக்கானோர் மீது பரிசோதனைகளை மேற்கொள்வது இலேசான காரியமன்று. இருப்பினும் சிகரெட் புகைப்பவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு இந்தப் பரிசோதனை வித்தியாசமான பலனைத் தருகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர் ஹெலினா பேபேக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.மற்றுமொரு ஆராய்ச்சியை ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் செலிடெ பிரான்ஸி மேற்கொண்டார். இவரது ஆய்வின் பிரகாரம் மனிதனின் பரம்பரை அலகு, சிகரெட் புகைத்தலுக்குக் காரணமாக இருக்கிறது என்பது புலனானது. சுமார் 40,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 15q25 நிற முகூர்த்தம் உள்ளவர்கள் தினமும் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மூன்றாவதாக, ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பரம்பரை அலகுகள் மனிதனின் புகைப் பழக்கத்திற்கு காரணமாக அமைகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. சுமார் 70 ஆயிரம் புகைப்பிடிப்பாளர்கள் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். CHRNB 3 மற்றும் CHRNA6 வகைகள் உடலில் எவ்வாறு நிக்கட்டின் உடலுக்குள் உட்செல்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இவை சில தருணங்களில் நுரையீரலைப் பாதித்து புற்று நோயை ஏற்படுத்துகின்றன. பரம்பரை அலகுகள், புகைபிடித்தல் பழக்கத்தைத் தூண்டுவதாக நுரையீரல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் வைத்திய நிபுணர் டாக்டர் நோர்மன் எடில்மன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக