வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் நேற்றைய தினம் முற்பகல் 10.00மணியளவில் கடத்தப்பட்ட அவர் வவுனியா பொதுமருத்துவமனைக்கு மருந்தெடுக்க சென்ற நிலையில் இவர் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியை சேர்ந்த 28வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனத் தெரிவிக்கப்படுகிறது இவர் வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்பொழுது வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார் இவர் கடத்தப்பட்டுள்ள நிலையில் இவரை விடுவிப்பதற்காக அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆயுதக்குழுவின் உறுப்பினர் தான் எனத் தெரிவித்த தீபன் என்பவர் உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பேரம்பேசி வருவதாகவும் மேலும் தெரிய வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக