திங்கள், 22 பிப்ரவரி, 2010

அமைச்சர் வி. முரளீதரன் (கருணாஅம்மான்) எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார்..!!

தேசநிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாஅம்மான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 2008ம் ஆண்டு கருணா தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பதவி விலகியதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கருணா அம்மான் தெரிவுசெய்யப்பட்டார். எவ்வாறெனினும், இம்முறையும் கருணா தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவாரா என்பது குறித்து தெளிவாக குறிப்பிடமுடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக