கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தரொரண்டோ ஸ்ரார் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக இலங்கை- கனடா வணிக பேரவை மற்றும் கனேடிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் குல செல்லத்துரை தெரிவித்துள்ளார்.இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை – கனேடிய வர்த்தகப் பேரவையின் தலைவர் செல்லத்துரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பு குறித்த செய்திகள் அப்பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையப் பெற்றுள்ளதென செல்லத்துரை குறிப்பிட்டுள்ளார்.அமைதியான முறையில் வாழ்வதற்காகவே கனடாவிற்கு வந்ததாகவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக