தேர்தலும் எங்கள் நிலைப்பாடுகளும்கடந்தகால செயற்பாடுகள் அனுபவங்களிலிருந்து அவற்றைப் பக்கச் சார்பற்ற ரீதியில் மீள்சிந்தனைக்கு உட்படுத்தி அவற்றிலிருந்து நடைமுறைக்கு செல்வது பொருத்தமான காரியமாக அமையுமென்பதால் நாம் இத்தேர்தலில் இருந்து விலகியிருக்க விரும்புகின்றோம். திருமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட நேரிடும் என்ற காரணத்தினால் இன்றைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாராளுமன்றத்தில் தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதுடன், இத்தேர்தல் மூலம் தமிழ்பேசும் மக்களுக்கு எந்தவிதமான தீர்வும் எட்டப்படாதென ஈரோஸ் அமைப்பினராகிய நாம் திடமாக நம்புகிறோம். அத்துடன் ஈ.டீ.எவ் என்னும் ஈழவர் ஜனநாயக முன்னணிக்கும் ஈரோஸ_க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென உறுதிப்படுத்துகின்றோம். ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பு முன்பு ஈரோஸ் அமைப்பின் அரசியல்பிரிவாக செயற்பட்டது. அந்த அமைப்புக்கு புலிகள் தடையாக இருந்ததுடன் ஒட்டுமொத்த ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகளையும் தடைசெய்தது. 1990ம் ஆண்டு கலைக்கப்பட்ட ஈ.டீ.எவ் என்னும் ஈழவர் ஜனநாயக முன்னணி அமைப்பை அதன் பொதுச்செயலாளர் வே.பாலகுமாரன் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டமை நீங்கள் அனைவரும் அறிந்ததே. மீண்டும் அந்த அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி பிற்போக்கு சக்திகளின் சதித்திட்டத்தின் ஊடாக தமிழ்பேசும் மக்களை தவறான திசையில் வழிநடத்த முற்படுகின்றார்கள். எனவே ஈரோஸ் அமைப்பினராகிய நாம் ஈ.டீ.எவ் உடன் எந்தவித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லையென்பதை உறுதிப்படுத்துவதுடன் ஈ.டீ.எவ் பின் தவறான போக்குக்கும் எங்களுக்கும் தொடர்புமில்லையென்றும் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதுடன் இனங்களுக்கிடையிலான உறவை ஏற்படுத்த பொதுநலன் சக்திகளுக்கு துணைநிற்போம் என்பதை அறியத் தருகின்றோம்.
இவ்வண்ணம்
ஈரோஸ் பொதுக்குழு சார்பாக
ம.சக்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக