எதிர்காலத்தில் கிழக்கின் தலைமைத்து வத்தை புத்திஜீவிகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புத்திஜீவிகளை வேட்பாளர்களாக நியமித்துள்ளதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிடும் புத்திஜீவிகளை அங்கீகரித்து ஆதரவை வழங்குமாறும் அமைச்சர் முரளிதரன் கிழக்கு மாகாண மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண வேட்பாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார். ஐ.ம.சு.கூட்டமைப்பை வெற்றியடையச் செய்து அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்த முடியும். இதனூடாக கிழக்கில் அபிவிருத்தியை மேலும் வலுப்பெறச் செய்யமுடியும். இதேபோன்று வடக்கிலும் ஐ.ம.சு.மு. வெற்றியடையும் என்றும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
புதன், 24 பிப்ரவரி, 2010
கிழக்கின் தலைமைத்துவத்தை புத்திஜீவிகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் -அமைச்சர் முரளிதரன்..!
எதிர்காலத்தில் கிழக்கின் தலைமைத்து வத்தை புத்திஜீவிகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புத்திஜீவிகளை வேட்பாளர்களாக நியமித்துள்ளதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிடும் புத்திஜீவிகளை அங்கீகரித்து ஆதரவை வழங்குமாறும் அமைச்சர் முரளிதரன் கிழக்கு மாகாண மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண வேட்பாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார். ஐ.ம.சு.கூட்டமைப்பை வெற்றியடையச் செய்து அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்த முடியும். இதனூடாக கிழக்கில் அபிவிருத்தியை மேலும் வலுப்பெறச் செய்யமுடியும். இதேபோன்று வடக்கிலும் ஐ.ம.சு.மு. வெற்றியடையும் என்றும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக