ஐரோப்பிய நாடுகளின் தாளத்திற்கு ஆட்டம் போடநாம் தயாரில்லை அத்தோடு எமது நாட்டு பிரச்சனைகளில் தலையிடுவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார் அண்மையில் எரிபொருள் நிலையமொன்றை அண்மையில் திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் அங்கு மேலும் தெரிவிக்கையில் சட்டம் அனைவருக்கும் சமமானது இதற்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் கிடையாது அணியும் சீருடை முக்கியமானதல்ல சட்டத்தின் முன்னிலையில் நாமனைவரும் சமமானவர்கள் சட்டம் நிறைவேற்றப்படாத இடம் பாலைவனமாகும் சட்டம் இல்லாத இடத்தில் ஒழுக்கச் சீர்குலைவு ஏற்படும் சட்டம் இல்லாவிட்டால் அபிவிருத்தியின் இலக்கையும் அடையமுடியாது எனவே இன்னொரு நாட்டுப் பிரச்சனையில் நாம் தலையிடுவதில்லை எமது நாடு ஒழுக்கம் பண்புகளை பாதுகாத்து வருகிறது ஐரோப்பிய நாடுகள் இவ் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பதற்காக ஏனைய நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு அனுமதிப் பத்திரமாக அதனை பயன்படுத்த முடியாது ஐரோப்பிய நாடுகளின் தாளத்திற்கு ஆடுவதற்கு நாம் தயாரில்லை அன்றும் இன்றும் ஒரேயொரு தாளத்திற்கே ஆடுகிறோம் அதுதான் எமது நாட்டு மக்கள் போடும் தாளத்திற்கு ஆடுவதாகும். எமது நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன மக்களின் கருத்துகளுக்கு செவிமடுக்கப்படுகிறது ஆனால் தேர்தல்களையே நடத்தாத நாடுகள் இன்று ஜனநாயகத்தை பற்றிப் பேசுகின்றன ஊழல் மோசடிகளை தடுத்து வீண்விரயங்களை குறைத்து பாரியதொரு சமூக மாற்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் திட்டமிட்ட முதலீடுகளை ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது அதற்காகவே மகா சங்கத்தினரது ஆசீர்வாதத்தை மக்கள் ஆணையும் கோருகிறோம்.
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
ஐரோப்பிய நாடுகளின் தாளத்துக்கு ஆட்டம் போட முடியாது -பிரதமர் ரட்னசிறி..!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக