இலங்கை வருகை தந்துள்ள கனேடிய வர்த்தக சம்மேளனத்தைச் சேர்ந்த முதலீட்டு குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் கனேடிய இலங்கை வர்த்தக சம்மேளனத் தலைவர் கணேசன் சுகுமார் உப தலைவர் கலாநிதி பொன். சிவாஜி பொருளாளர் குல. செல்லத்துரை பிரதி அமைச்சர் சரத் குணரட்ண கனடாவிற்கான இலங்கையின் சுற்றுலாத்துறை உயர் ஸ்தானிகர் என்.வீரசிங்க ஆகியோர் பங்குகொண்டனர். ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னதாக கனேடிய வர்த்தக சம்மேளனத்தைச் சேர்ந்த முதலீட்டு குழுவினர் யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தினை மேற்கொண்டு விட்டு கொழும்பிற்கு திரும்பியிருந்தமை முக்கிய விடயமாகும். ஜனாதிபதியுடனான மேற்படி சந்திப்பின்போது கனடா ரொராண்டோவில் வதியும் புலம் பெயாந்த தமிழ் மக்களினால் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பாதிப்புக்குள்ளாகி வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சிறுவர்களின் மேம்பாட்டிற்காக சேகரிக்கப்பட்ட இருபதினாயிரம் அமெரிக்க டொலர் நிதியினை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்தனர். இவ்வேளை புலம் பெயர்ந்து வாழும் முதலீட்டாளர்கள் வடக்கு கிழக்கில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி இதன்மூலம் வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த உறவுகளும் தமது பங்களிப்பினை வழங்க முடியும் என்பதையும் தெரியப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக