தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவுமில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடக் கூடிய சாத்தியம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டால் அது வரவேற்கக்கத்தக்கது எனவும் கட்சியின் எம்.பி சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஆனந்தசங்கரி கூறியுள்ளார். யுத்தகாலத்தில் அப்பாவி தமிழ் பொதுமக்கள் அழிவுகளை எதிர்நோக்கியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பொறுப்பாளிகளாவர். புலிகள் மனிதக் கேடயமாக பொதுமக்களை பயன்படுத்தியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை தட்டிக்கேட்கத் தவறியது. வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளோம் என்றும் ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக