செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவின் சம்பந்தியிடம் குற்றப்புலனாய்வுத் துறையினர் வாக்குமூலம் பெற்றனர். தனுன தொடர்ந்தும் தலைமறைவு..!!

சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் திருமதி. அசோக திலகரத்னவிடம் இன்று மாலை குற்றப்புலனாய்வு பொலீஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். முன்னதாக திருமதி. அசோக திலகரத்னவின் வங்கிப்பெட்டகத்தில் இருந்து பெருமளவு வெளிநாட்டு நாணயத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டதுடன் அவரின் இரு வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன எங்குள்ளார் என்று தெரியவில்லை என பொலீஸ் பேச்சாளார் தெரிவித்துள்ளார். தனுன திலகரட்ன நாட்டை விட்டு வெளியேறியுள்ளாரா? என்பது தொடர்பிலும் எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்த பொலீஸ் பேச்சாளர் தனுன திலகரட்னவை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக