ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

தனக்கு தேசியப்பட்டியலில் இடம் உண்டு என்கிறார் அமைச்சர் முரளிதரன்..!

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்படவுள்ளதாக அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் கணேசமூர்த்தி குணம் (களுதாவளை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன், ரமேஷ் ஆகியோர் தமிழர்கள் தரப்பில் போட்டியிட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் முரளிதரன் இன்னுமொரு தமிழ் வேட்பாளர் பெயர் இன்று சிபாரிசு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சார்பில் ஆளும் சார்பில் ஆளும் தரப்பில் அமைச்சர் அமீர் அலி கிழக்கு மாகாணசபை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக