திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வடக்கில் படகில் போட்டி..!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனு பத்திரத்தை கையளிக்கவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா கூறினார். முதற் தடவையாக தமது கட்சி கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் போட்டியிடவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா சுட்டிக்காட்டியிருப்பதுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக