தகுதியானவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டால் கட்சியிலிருந்து வெளியேறுவதில் எவ்வித சிக்கலும் கிடையாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். குறிப்பாக தமது கட்சி இளைஞர் யுவதிகளின் பங்களிப்பினை பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேராசை மிக்க அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ்மக்களை பாதுக்காக இளைஞர் யுவதிகள் கூடுதல் முனைப்புக்காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கட்சி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் தமது கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும். தமிழர்களும், தமிழ்பேசும் மக்களும் அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையான தீர்வுத்திட்டம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலை தமிழர்கள் மற்றும் தமிழ்பேசும் மக்களிடையேயான ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தி நிற்கிறது. வடக்கு கிழக்கு தமிழர்கள் மட்டுமன்றி நாடுமுழுவதிலும் உள்ள சகலமக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் மலர்ந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தாம் இக்கட்சியை விட்டு விலகுவதன்மூலம் கட்சிக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் என எவரேனும் யதார்த்தபூர்வமாக விரும்பினால் தமது பதவியை துறப்பதற்கு துளியும் சிந்திக்கப் போவதில்லை என ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
தகுதியானவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டால் கட்சியிலிருந்து வெளியேறுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது -வீ.ஆனந்தசங்கரி
தகுதியானவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டால் கட்சியிலிருந்து வெளியேறுவதில் எவ்வித சிக்கலும் கிடையாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். குறிப்பாக தமது கட்சி இளைஞர் யுவதிகளின் பங்களிப்பினை பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேராசை மிக்க அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ்மக்களை பாதுக்காக இளைஞர் யுவதிகள் கூடுதல் முனைப்புக்காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கட்சி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் தமது கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும். தமிழர்களும், தமிழ்பேசும் மக்களும் அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையான தீர்வுத்திட்டம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலை தமிழர்கள் மற்றும் தமிழ்பேசும் மக்களிடையேயான ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தி நிற்கிறது. வடக்கு கிழக்கு தமிழர்கள் மட்டுமன்றி நாடுமுழுவதிலும் உள்ள சகலமக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் மலர்ந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தாம் இக்கட்சியை விட்டு விலகுவதன்மூலம் கட்சிக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் என எவரேனும் யதார்த்தபூர்வமாக விரும்பினால் தமது பதவியை துறப்பதற்கு துளியும் சிந்திக்கப் போவதில்லை என ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக