
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பது சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பவே என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க கிரிந்திவெலவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பின்போது கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் சுய இராஜ்ஜியம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும். வடக்கிலிருந்து படையினரை அகற்ற வேண்டும். தமிழர் சுயாட்சிக்கான அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். எனினும் அவற்றை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். தமது கோரிக்கைகளை ஜனாதிபதி நிராகரித்தபின்பே தாம் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டதாக அவர்கள் கூறிவருகின்றனர். எனவே எதிர்க்கட்சி கூட்டமைப்புடன் ஏற்படுத்திய உடன்படிக்கையை வெளிப்படுத்துமாறு பிரதமர் கோரியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக