தமது கீர்த்திக்கு பங்கம் விளைவித்ததாக கூறி 8செய்தித்தாள்கள் மீது சட்டநடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாக எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சரத்பொன்சேகாவின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குறித்த செய்தித்தாள்களுக்கு சட்டக்கோரல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியான கட்டுரை ஒன்று தொடர்பிலேயே இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது இதேவேளை தம்மை இழிவுபடுத்தும் அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சரத்பொன்சேகா தரப்பு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக