தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று புதுடில்லியிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில் இன்று இந்தியா சென்றுள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கம் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய இக்குழுவில் இரா.சம்பந்தன் மாவைசேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றம் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது கனடாவில் தங்கியிருப்பதால் இக்குழுவில் இடம்பெறவில்லை. இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சென்றுள்ள இக்குழுவினர் எதிர்வரும் 16ம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருக்கும் காலகட்டத்தில் இவர்களுடைய இந்த விஜயமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக